லாகூர்: பாகிஸ்தானின் சர்வதேச ஏர்லைன்சில் போலி சான்றிதழ்களுடன் இரண்டு விமானிகள் பல ஆண்டுகளாக பணியாற்றியதை எப்ஐஏ கண்டுபிடித்துள்ளது. பாகிஸ்தானின் இன்டர்நேஷனல் ஏர்லைன்சில் கடந்த 2022ம் ஆண்டு ஆய்வு நடந்தபோது இரண்டு விமானிகள் போலி பட்டப்படிப்புக்களின் அடிப்படையில் சேர்ந்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டது. 1995 மற்றும் 2006ம் ஆண்டு முதல் முறையே கஷன் ஐஜாஸ் தோதி மற்றும் மொஹ்சின் அலி ஆகியோர் விமானிகளாக பணியாற்றி உள்ளனர். இது தொடர்பாக புலனாய்வு ஏஜென்சி மேற்கொண்ட விசாரணையில் இரண்டு விமானிகளின் சான்றிதழும் போலியானவை என்பது உறுதியானது.
தோதி 2019ம் ஆண்டு மற்றும் அலி 2014ம் ஆண்டு பணியில் இருந்து வெளியேறி உள்ளனர். இதுமட்டுமின்றி விமானப் பணிப்பெண் நசியா நஹீத் மற்றும் டோடா ஆப்பரேட்டர் ஆரிப் தரார் ஆகியோரும் போலி சான்றிதழ் மூலமாக ஏர்லைன்சில் பணியில் சேர்ந்துள்ளனர். இது தொடர்பான வழக்கில் 4 பேரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அவர்கள் நான்கு பேரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து நீதிமன்றம் கலையும் வரை அங்கேயே இருக்க வேண்டும் என்றும் மற்றும் வெவ்வேறு தொகைகளை அபராதமாக விதித்து உத்தரவிட்டார்.
The post பாகிஸ்தான் ஏர்லைன்சில் போலி சான்றிதழ்களுடன் பணியாற்றிய 2 விமானிகள் appeared first on Dinakaran.