பாகிஸ்தானிலுள்ள மதரஸாவில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம் அக்கோரா கட்டக் மாவட்டத்தில் தலிபான் நடத்தும் மதரஸா பள்ளி ஒன்று உள்ளது. இந்த மதரஸா வளாகத்தில் மசூதி அமைந்துள்ளது. இந்த மதரஸாவில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமானோர் வளாகத்தில் கூடியிருந்தனர். இந்நிலையில் பிற்பகல் நேரத்தில் குண்டுவெடிப்பு நடந்தது.