பெஷாவர்: பாகிஸ்தானின் கைபர்பக்துன்க்வாவில் தெற்கு வசிரிஸ்தான் பழங்குடி மாவட்டத்தில் ஷகாய் பகுதியில் உள்ள சோதனை சாவடி அருகே திடீரென குண்டுவெடித்தது. இதில் ஐந்து வீரர்கள் உட்பட சோதனை சாவடியை பைக்கில் கடக்க முயன்ற ஒருவரும் பலத்த காயமடைந்தனர்.இதில்ஒருவர் உயிரிழந்தார். இதேபோல் கைபர் மாவட்டத்தில் பார் கம்பார் கேல் பகுதியை பாதுகாப்பு படையினரின் வாகனம் கடந்து சென்றது. அப்போது மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் வாகனத்தில் ஓட்டுனரான வீரர் உயிரிழந்தார். இந்த இரண்டு சம்பவங்களும் தீவிரவாத தாக்குதலாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
The post பாக்.கில் குண்டு வெடித்து வீரர் உட்பட 2 பேர் பலி appeared first on Dinakaran.