புதுடெல்லி: மாநில அமைப்புகளுக்கான தேர்தலை இம்மாதம் நடத்தி முடித்த பிறகு புதிய தேசிய தலைவரை தேர்ந்தெடுக்க பாஜக திட்டமிட்டுள்ளது.
இத்தேர்தலை கடந்த ஜனவரியில் நடத்த பாஜக திட்டமிருந்தது. ஆனால் டெல்லி சட்டப்பேரவை தேர்தல் மற்றும் பல்வேறு மாநில அமைப்புகளில் தேர்தல் நிலுவையில் இருப்பதால் இத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.