சென்னை: மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதிமுகவில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு நாங்கள் காரணமல்ல. ரஷியாவில் சிக்கியுள்ள மருத்துவ மாணவரை மீட்பதற்கான கோரிக்கை கடிதத்தில், எதிர்நிலையில் இருக்கும் பாஜக எம்.பி.க்களிடம் ஏன் கையெழுத்து பெற்றார் என்பதற்கு மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ விடையளிக்க வேண்டும்.
அவர் பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக தமிழகத்தில் இருக்கிறார் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். மதிமுக வைகோவின் கட்டுப்பாட்டில் இல்லை. கருணாநிதியின் இறுதி தருவாயில் காலமெல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்று அளித்த உத்தரவாதம் உண்மையானால், பாஜகவிடம் கையெழுத்து பெற்றது தவறு என ஏன் கண்டிக்கவில்லை.