கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் துர்காபூரில் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், 'பெண்கள் இரவில் கல்லூரியை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது' என்று கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில், ஒடிசாவைச் சேர்ந்த மாணவி (23) ஒருவர் 2-ம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை தனது ஆண் நண்பருடன் மாலை வெளியே சென்று விட்டு இரவு 8.30-க்கு கல்லூரி விடுதிக்கு திரும்பினார். அப்போது ஒரு கும்பல் மருத்துவ மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து தப்பியது. ஆண் நண்பரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.