டெல் அவிவ்: பிரதமர் மோடியுடன் போனில் பேச, காசா அமைதி ஒப்பந்தம் குறித்து ஆலோசிக்கும் பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நிறுத்தினார்.
இஸ்ரேல் – காசா அமைதி திட்டம் குறித்து 20 அம்ச கொள்கை திட்டத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொண்டு வந்தார். இது தொடர்பாக எகிப்தில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி உயிரோடு இருக்கும் இஸ்ரேல் பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவர். இறந்த பிணைக் கைதிகளின் உடல்களும் ஒப்படைக்கப்படும். இந்த காசா அமைதி ஒப்பந்தம் குறித்து ஆலோசிப்பதற்காக பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று முன்தினம் கூட்டினார்.