விழுப்புரம்: விழுப்புரத்தில் வேல்முருகன் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் நேற்று கூறுகையில், ‘மதத்தின் பெயரால் மக்களை பிரிக்க நினைக்கும் பாஜ எதிர்க்கட்சியாக இருக்கும் எடப்பாடி பழனிசாமியை தனது கூட்டணிக்குள் கொண்டுவர அவரது உறவினர் வீடுகளுக்கு அமலாக்கதுறை சோதனையை ஒன்றிய அரசு மேற்கொண்டது. உத்தரபிரதேசத்தில் மாட்டு சாணத்தையும், கோமியத்தையும் குடித்து உயிர்வாழ்கிறார்கள். அதுபோல் தமிழக மக்களை உயிர்வாழ சொல்வது கல்வியாளருக்கு அழகல்ல. அதனை வன்மையாக கண்டிக்கிறோம்’ என்றார்.
தொடர்ந்து பாமகவில் இளைஞரணி புதிதாக போடப்பட்டதில் ஏற்பட்ட பிரச்னை குறித்த கேள்விக்கு பதிலளித்த வேல்முருகன், ‘நான் பாமகவிலிருந்து விலகி அந்த கட்சியைவிட வளர்ந்து விட்டேன். தமிழ்நாட்டில் பொதுக்கட்சியாக இருந்து வருகிறேன். மீண்டும் ஏன் என்னை பழைய இடத்திற்கே கொண்டு செல்கிறீர்கள். தொடர்ந்து திமுக கூட்டணியில் தான் நாங்கள் நீடித்து வருகிறோம்’ என்றார்.
The post பாமகவைவிட நாங்கள் வளர்ந்துவிட்டோம்: வேல்முருகன் தடாலடி appeared first on Dinakaran.