பாரதத்தை ஒரு தேசமாகவும் அதன் அரசியலமைப்பாகவும் ஏற்றுக்கொள்ளாத, மதிக்காத ஒரு தலைவராக இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆணவம் நல்லதல்ல என்று என்று ஆளுநர் மாளிகை விமர்சித்துள்ளது.
2025-ம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கடந்த 6-ம் தேதி தொடங்கியது. தேசிய கீதம் இசைக்கப்படாததால் உரையை படிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியதாக, ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்திருந்தது. ஆளுரை வெளியேறியதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் விமர்சனம் செய்திருந்தார்.