பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தெருநாய்களை போன்று ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்று ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபாவ் பாக்டே தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானின் பாரத்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற பார் அசோசியேசன் கூட்டத்தில் அவர் பேசியதாவது: மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி ஆட்சி நடைபெற்றபோது சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருந்தது. அவரது ஆட்சிக் காலத்தில் ஒரு கிராமத்தின் தலைவர், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார். இதுதொடர்பாக மாமன்னர் சிவாஜி விசாரணை நடத்தினார். அப்போது அவர் ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்தார். பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளை கொலை செய்ய வேண்டாம். ஆனால் அவர்களது கை, கால்களை உடைத்துவிடுங்கள். அவர்கள் வாழ்நாள் முழுவதும் மாற்றுத்திறனாளிகளாக வாழ வேண்டும் என்று மாமன்னர் சிவாஜி உத்தரவிட்டார்.