ஊத்துக்கோட்டை: ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் கிராமத்தில் மிகப்பெரிய ஏரி உள்ளது. மழை காலங்களில் இந்த ஏரி நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டால் நாகலாபுரம், சுருட்டப்பள்ளி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக தண்ணீர் சென்று பழவேற்காடு கடலில் கலக்கும். இப்படி வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமித்து வைக்க பெரியபாளையம் பாளேஸ்வரம் பகுதியில் ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என பல நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
அதன்படி, பாளேஸ்வரம் பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டது. இதனால், பாளேஸ்வரம் தடுப்பணை நிரம்பி அதன் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இது, பெரியபாளையத்தை சுற்றியுள்ள கிராம மக்கள், விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
The post பாளேஸ்வரம் தடுப்பணை நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.