சென்னை: இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு சார்பில் பிஎஃப்ஐ கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 60 முதல் 65 கிலோ எடை பிரிவு இறுதிப் போட்டியில் அசாமை சேர்ந்த அங்குஷிதா போரோ 3-2 என்ற கணக்கில் ராஜஸ்தானை சேர்ந்த பர்தவி கிரேவாலை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.
65 முதல் 70 கிலோ எடை பிரிவு இறுதிப் போட்டியில் சர்வீசஸ் அணியை சேர்ந்த அருந்ததி சவுத்ரி 5-0 என்ற கணக்கில் ஆந்திராவை சேர்ந்த ஸ்நேகாவை தோற்கடித்து பட்டம் வென்றார். 57 முதல் 60 கிலோ எடை பிரிவு இறுதிப் போட்டியில் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற பர்வீன் ஹூடா (சாய்) 3-2 என்ற கணக்கில் ஹரியானாவை சேர்ந்த பிரியாவை தோற்கடித்தார்.