ஒரு காலத்தில் ஒட்டுமொத்த தென் மாவட்ட திமுகவே மு.க.அழகிரியின் கண்ணசைவில் சுழன்றது. இப்போது அழகிரி ஆக்டீவ் அரசியலில் இல்லாததால் குருநில மன்னர்கள் நிறையப் பேர் கோலோச்சுகிறார்கள். அந்த வகையில், மதுரை திமுகவின் அடுத்த தலைமுறை அதிகார மையங்களாக அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் உள்ளனர்.
பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு நெருக்கம் என்பதாலும் எடுத்த எடுப்பிலேயே திமுக அமைச்சரவையில் நிதியமைச்சர் அந்தஸ்தில் அமரவைக்கப்பட்டார் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.