புதுடெல்லி: பிரதமரின் கிசான் சம்படா திட்டத்தின் கீழ் ரூ.31,830 கோடி மதிப்பிலான 1,646 உணவு பதப்படுத்துதல் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2016-17 நிதியாண்டு முதல் பிரதமரின் கிசான் சம்படா திட்டத்தை (பிஎம்கேஎஸ்ஒய்) மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் உணவுப்பொருள் பதப்படுத்துதல் மற்றும் சேமித்தல் திறன் ஆண்டுக்கு 428.04 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 13.42 லட்சம் பேருக்கு வேலை கிடைப்பதுடன் 51.24 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.