ராமேசுவரம்: பிரதமர் மோடியின் இலங்கைப் பயணத்தையொட்டி, தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கையில் உள்ள ஊர்காவல் துறை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விடுதலை செய்து உத்தரவிட்டது.
கடந்த மார்ச் 27-ம் தேதி அன்று ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்று, நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெர்ஜிஸ் அந்தோணி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை இலங்கை கடற்படையினர் ரோந்து பணியின் போது சிறைப்பிடித்தனர். படகுகளிலிருந்த ஜெர்ஜிஸ் அந்தோணி , இன்னாசி, பாலமுருகன், சவேரியார் அடிமை, ஆர்னால்ட், பாக்கியராஜ், ரஞ்சித், எபிராஜ், அந்தோணி சீசரியன், முத்துகளங்கியம், கிறிஸ்துராஜாஆகிய 11மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.