பிரபல ஹாலிவுட் நடிகர் வில்லியம் லெவி (44). இவர் ‘பிளானட் 54’, ‘எ சேஞ்ச் ஆஃப் ஹார்ட்’, ‘கேர்ள்ஸ் ட்ரிப்’, ‘ரெசிடன்ட் எவில்: த பைனல் சாஃப்டர்’ என பல படங்களில் நடித்துள்ளார். இவர் மீது, தெற்கு புளோரிடாவில் உள்ள ப்ரோவர்டு என்ற பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் மதுபோதையில் முறையற்ற வகையில் நடந்துகொண்டதாகவும் ஊழியர்களைத் தாக்கியதாகவும் கடந்த திங்கள்கிழமை புகார் எழுந்தது.
இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு இரண்டு மாதம் சிறைத் தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை வில்லியம் லெவி மறுத்துள்ளார்.