தமிழ், தெலுங்கு, இந்தியில் நடித்து வரும் மாளவிகா மோகனன், இப்போது பிரபாஸுடன் ‘த ராஜா சாப்’, கார்த்தியின் ‘சர்தார் 2’ படங்களில் நடித்து வருகிறார். ‘த ராஜா சாப்’ படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகும் அவர், அந்தப் படத்தில் நடிக்க என்ன காரணம் என்பதைத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி மாளவிகா மோகனன் கூறும் போது, “நான் இதுவரை நடிக்காத ஹாரர் காமெடி வகை படம் இது. அதனால் இந்தக் எனக்கு ஆர்வத்தைத் தந்தது. பெரும்பாலான கதை படங்களில் ஹீரோ கதாபாத்திரம் பெரியதாகவும், நாயகிக்குக் குறைவான காட்சிகளும் இருக்கும். ஆனால், ‘தி ராஜா சாப்’ படத்தில் அப்படியில்லை. படம் முழுவதும் வருகிறேன். எனது கதாபாத்திரத்துக்கு அருமையான காட்சிகளும் உள்ளன.