விண்ணிலிருந்து எடுக்கப்பட்ட மகா கும்பமேளா நடைபெறும் இடத்தின் புகைப்படங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பிரக்யாக்ராஜில் மகா கும்பமேளா தொடங்கி நடந்து வருகிறது. வரும் பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கும்பமேளா நிகழ்ச்சியில் பல கோடி பக்தர்கள் புனித நீராடவுள்ளனர். இந்த கும்பமேளாவுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து திரிவேணி சங்கமத்தில் தினந்தோறும் பல லட்சம் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான குடிநீர், தங்குமிடம், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் உத்தரபிரதேச அரசு செய்து கொடுத்துள்ளது.