கென்யாவைச் சேர்ந்த, பிரான்ஸில் படித்து வரும் நெல்சன் அமென்யா கடந்த ஜூலை மாதம் ஒரு சில ஆவணங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதனால் கென்யாவில் எழுந்த போராட்டமும், அமெரிக்க நீதித்துறை அதானி குழுமம் மீது முன்வைத்த குற்றச்சாட்டுகளும் கென்யாவில் அதானி குழுமத்தின் திட்டங்கள் ரத்தாக காரணமாயின. ஊழலுக்கு எதிரான செயற்பாட்டாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற அவர் தற்போது மான நஷ்ட வழக்குகளை சந்தித்து வருகிறார். யார் இந்த நெல்சன் அமென்யா?