பிரிட்டன் அரசு வெளியிட்டிருக்கும் குடியேற்ற வெள்ளை அறிக்கை, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் கடும் கட்டுப்பாடுகளைப் பரிந்துரை செய்திருப்பது பெரும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. புதிய குடியேற்ற விதிகள், இந்தியாவிலிருந்து செல்லும் மாணவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்னும் அச்சம் எழுந்திருக்கிறது.
முந்தைய கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியின்போது, கட்டுப்பாடற்ற குடியேற்றங்கள் அதிகரித்ததாகவும், உயர் திறன் பெற்ற தொழிலாளர்களைவிடவும், கீழ்மட்ட வேலைத் திறன் கொண்ட தொழிலாளர்களே அதிகம் குடியேறியிருப்பதாகவும் குற்றம்சாட்டியிருக்கும் பிரிட்டன் அரசு, குடியேற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெடுப்புகளில் ஒன்றாக இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.