இண்டர்போல் அமைப்பால் நீண்ட காலம் தேடப்பட்டு வந்த பிரபல தாதா ஜோகிந்தர் கியோங் பிலிப்பைன்சிலிருந்து நாடு கடத்தப்பட்டு நேற்று முறைப்படி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஹரியானா போலீஸாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி ஜோகிந்தர். இவர் மீது கொலை, கொள்ளை குற்றச்சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பானிப்பட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக இண்டர்போல் அமைப்பும் ரெட் நோட்டீஸ் வெளியிட்டு தீவிரமாக தேடிவந்தது.