சென்னை: கூகுள் பே யுபிஐ மூலம் மின்சார கட்டணம், குடிநீர் பயன்பாட்டு கட்டணம் போன்றவற்றை பயனர்கள் செலுத்துவது வழக்கம். இந்நிலையில், அதற்கு கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு மொபைல் ரீசார்ஜுகளுக்கு ரூ.3 வீதம் கட்டணம் விதித்தது கூகுள் பே.
இதை Convenience Fee என கூகுள் பே வசூலித்து வருகிறது. இருப்பினும் பில் பேமென்ட்களை டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் செலுத்தும் பயனர்களுக்கு மட்டும் இந்த கட்டணம் இப்போதைக்கு விதிக்கப்படுகிறது. பரிவர்த்தனை தொகையின் மதிப்பில் 0.5% முதல் 1% வரை இந்தக் கட்டணம், ஜிஎஸ்டியுடன் சேர்த்து வசூலிக்கப்படுகிறது.