12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கிவிட்டது. தேர்வை எழுதும் 8.21 லட்சம் பேரில் பலர், 11ஆம் வகுப்பில் அடியெடுத்து வைத்தது முதலே, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கவனம் செலுத்திவருகிறார்கள். மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்களுடன் அரசு இயந்திரத்தின் கவனமும் இதில் கணிசமாக இருக்கிறது.
12ஆம் வகுப்பு மதிப்பெண்களுக்காக மாணவர்கள் செலுத்தும் உழைப்பு மகத்தானது. “உலகின் மிகக் கடினமான வேலை இந்தியாவின் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு” என்று கல்வியாளர் ஆயிஷா இரா.நடராசன் குறிப்பிடுகிறார். ஒரு வேள்வியைப் போல் இந்தத் தேர்வு பார்க்கப்படுகிறது.