தரம்சாலா: எஞ்சிய 3 ஆட்டங்களிலும் நிலைமையை மாற்றி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவோம் என லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் தரம்சாலாவில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. 236 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணியானது 7 விக்கெட்கள் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து தோல்வி சந்தித்தது. அதிகபட்சமாக ஆயுஷ் பதோனி 40 பந்துகளில், 74 ரன்களும் அப்துல் சமத் 24 பந்துகளில் 45 ரன்களும் விளாசினர்.