
பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். அந்த கூட்டணியை சேர்ந்த விஐபி கட்சியின் தலைவர் முகேஷ் சஹானி துணை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் (என்டிஏ), ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் அடங்கிய மெகா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

