
பாட்னா: வரும் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக பிஹார் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 101, ஐக்கிய ஜனதா தளம் 101, லோக் ஜன சக்தி (ராம்விலாஸ்) 29, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 6, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 6 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

