பிரபல ஹாலிவுட் இயக்குநரும் நடிகருமான டேவிட் லின்ச் (David Lynch)காலமானார். அவருக்கு வயது 78.
ஹாலிவுட்டில் வெளியான, தி எலிபன்ட் மேன் (1980), ப்ளூ வெல்வெட் (1986), வைல்ட் அட் ஹார்ட் (1990), லாஸ்ட் ஹைவே (1997), இன்லேண்ட் எம்பைர் (2006) என பல படங்களை இயக்கியிருப்பவர் டேவிட் லின்ச். இவர் மார்க் ஃப்ரோஸ்ட்டுடன் இணைந்து உருவாக்கிய சின்னத்திரை தொடரான ட்வின் பீக்ஸ், உலகம் முழுவதும் கவனம் பெற்றது. கடைசியாக, டுடேஸ் நம்பர் இஸ்… என்ற வெப் தொடரைத் தயாரித்து இயக்கி இருந்தார்.