கூவம் ஆற்றில் புட்லூர் தடுப்பணை அருகே மழைநீர் வடிகால்வாய் மூலமும் நேரடியாகவும் கழிவுநீர் கலப்பதால் நிலத்தடி நீர் மாசடைந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் பாயும் முக்கிய ஆறுகளில் ஒன்று கூவம். ராணிப்பேட்டை மாவட்டம், கேசாவரம் கிராமத்தில் கல்லாற்றின் குறுக்கே உள்ள அணைக்கட்டிலிருந்து உருவாகும் இந்த ஆறு, 72 கி.மீ. பயணித்து, சென்னையில் நேப்பியர் பாலம் அருகே வங்காள விரிகுடாகடலில் கலக்கிறது.
இந்த ஆறு, திருவள்ளூர், பூந்தமல்லி மற்றும் ஆவடி வட்ட பகுதிகளின் விவசாய நிலங்களின் முக்கிய நீர் ஆதாரமாகவும், அப்பகுதிகளின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. இந்நிலையில், திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றில் புட்லூர் தடுப்பணை அருகே மழைநீர் வடிகால்வாய்கள் மூலமும், நேரடியாகவும் கழிவுநீர் விடப்படுவதால் நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.