புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் அரசு கல்லூரி மாணவிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி நடந்தது.எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் ஏற்பாடு செய்த அரசு கலைஞர் கலைக்கல்லூரி விலங்கியல் துறை மாணவிகளுக்கான இரண்டு நாள் தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம் புதுக்கோட்டை எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன அலுவலகத்தில் நடைபெற்றது. பயிற்சி முகாமை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி விலங்கியல் துறைத் தலைவர் கீதா துவக்கி வைத்து உரையாற்றினார்.
எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன பயிர் மருத்துவர் மற்றும் தேனீ வளர்ப்பு நிபுணர் பாரதிதாசன், மாணவிகளுக்கு தேனீ வளர்ப்பின் பல்வேறு அம்சங்களை குறித்து செயல் விளக்க பயிற்சி அளித்தார். தேனீ வளர்ப்பு முறைகள், தேனீ வளர்ப்பதனால் ஏற்படும் நன்மைகள், வளர்க்க கூடிய இனங்கள், வளர்க்க முடியாத மலைத்தேனீ கொம்பு தேனீ , தேனீ வளர்ப்பில் ஏற்படும் இடர்பாடுகள், வளர்ப்பதற்கு ஏற்ற தேனீ இனங்கள், கொசு தேனீ வளர்ப்பு பற்றி மாணவிகளுக்கு விளக்கி கூறினார். தேனி பெட்டியை எவ்வாறு கையாளுவது, விலைகாரத் தேனீக்கள், ஆண் தேனீக்கள், ராணி தேனீக்கள் மற்றும் தேனீயின் வளர்ச்சியின் நிலைகளை கொக்கி விளக்கமாக செயல்முறையாக செய்து காட்டினார்.
தேனீ வளர்ப்பு தேன் எடுத்தல் ஆகிய செயல்பாடுகளை மாணவர்களே செய்து பார்த்து பயிற்சி பெற்றனர். தேனீ வளர்ப்பில் இளைஞர்களுக்கு உள்ள வேலை வாய்ப்புகள் மற்றும் மகரந்தச் சேர்க்கை மற்றும் பல் உயிர் பெருக்கத்திற்கு தேனீக்கள் எவ்வளவு முக்கியமானவை என்பதையும் மாணவிகளுக்கு எடுத்துக் கூறினார். கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி இணைப் பேராசிரியர் நாகசத்யா, விரிவுரையாளர்கள், கல்யாணி மற்றும் மகரஜோதி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி, மணிகண்டன், ஆராய்ச்சி நிறுவனத்தின் பல்வேறு செயல்பாடுகளை விளக்கிப் பேசினார். இப்ப பயிற்சியில் 80 விலங்கியல் துறை மாணவிகள் கலந்து கொண்டனர். தேனீ வளர்ப்பு பற்றிய பாடம், எங்களுடைய பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கின்றது. இந்த பயிற்சி செயல் விளக்க பயிற்சியாக அமைந்திருந்ததால் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
இந்த பயிற்சிகளில் கற்றுக் கொண்ட விஷயங்களை நாங்கள் கடைபிடிப்பதோடு மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்வோம் என்று மாணவிகள் தெரிவித்தனர். பயிற்சி முகாமிற்கான ஏற்பாட்டினை வினோத் கண்ணா மற்றும் கேஸ் .பிரிட்டோ ஆகியோர் செய்திருந்தனர். ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி கிட்ட ஆசிரியர். மீனா வரவேற்புரை நிகழ்த்தினார் , கள ஒருங்கிணைப்பாளர். விமலா நன்றி கூறினார்.
The post புதுக்கோட்டையில் அரசு கல்லூரி மாணவிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி appeared first on Dinakaran.