விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி புறப்பட்ட பயணிகள் ரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து விழுப்புரம் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.
விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து இன்று (ஜன.14) காலை பயணிகளை ஏற்றிக் கொண்டு புதுச்சேரி நோக்கி பயணிகள் ரயில் புறப்பட்டது. 7 பெட்டிகளுடன் பயணிகளை ஏற்றிக் கொண்டு விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பயணிகள் ரயில், சில அடி தூரம் சென்றதுமே ரயிலில் இருந்த 5-வது பெட்டியின் சக்கரங்கள் திடீரென தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியது.