திருவண்ணாமலை: புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலைக்கு நேற்று முன்தினம் தமிழக அரசு விரைவு பஸ் இயக்கிய டிரைவர் ஏழுமலை மற்றும் கண்டக்டர் நல்லதம்பி இருவரும் பாண்டிச்சேரியில் இருந்து 750 மில்லி லிட்டர் அளவு கொண்ட 7 மது பாட்டில்களை டிரைவர் இருக்கையில் பின் உள்ள பெட்டியிலும், நடத்துனர் பையிலும் மறைத்து கடத்தி வந்துள்ளனர்.
போக்குவரத்து துறை அதிகாரிக்கு வந்த ரகசிய தகவல் அடிப்படையில் செஞ்சி அருகே நட்டார்மங்கலம் வரும்போது அரசு பஸ்சில் ஏறிய பரிசோதகர்கள் சோதனை நடத்தி 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அவற்றை தீ வைத்து எரித்து அழித்தனர். மது பாட்டில்களை கடத்தி வந்த டிரைவர் மற்றும் கண்டக்டரை சஸ்பெண்ட் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
The post புதுவையில் இருந்து அரசு பஸ்சில் 7 மதுபாட்டில் கடத்திய டிரைவர், கண்டக்டர்: அதிரடி சஸ்பெண்ட் appeared first on Dinakaran.