ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. இதில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் சிஎஸ்கேவுடன் மோத உள்ளது. இந்நிலையில் மும்பை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா முதற்கட்ட ஆட்டங்களில் விளையாடமாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது ஜஸ்பிரீத் பும்ராவுக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதற்காக அவர், தற்போது பெங்களூருவில் பிசிசிஐ சிறப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். போட்டிகளில் விளையாடுவதற்கான முழு உடற்தகுதியை பும்ரா இன்னும் அடையவில்லை என கூறப்படுகிறது.