இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவின் தரத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்தத் தொடர் 2-2 என்ற கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இந்தத் தொடரின்போது ஜஸ்பிரீத் பும்ரா விளையாடாத 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது என்ற ரீதியில் செய்திகள் வெளிவந்தன.