சென்னை: புற்றுநோய் ஆராய்ச்சிக்காக நாட்டின் முதல் புற்றுநோய் மரபணு தரவுத் தளத்தை சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி அறிமுகம் செய்துவைத்தார். ”இதுவரை வெளிநாடுகளில் உள்ள தரவுகளை வைத்துதான் சிகிச்சை அளிக்கப்படுகிறது. புற்றுநோய்க்கான காரணம் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு மாதிரியாக உள்ளது. தற்போது 500 நோயாளிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் உள்ள மரபணு தரவுகளை ஒப்பிட்டு இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நம் தேசத்திற்கான பிரத்யேக மருந்தைக் கொடுக்கலாம் என்று காமகோடி கூறியுள்ளார்.
The post புற்றுநோய் ஆராய்ச்சிக்காக நாட்டின் முதல் புற்றுநோய் மரபணு தரவுத் தளத்தை அறிமுகம் செய்தார் ஐஐடி இயக்குநர் காமகோடி appeared first on Dinakaran.