புளோரிடா: புளோரிடா பல்கலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 மாணவர்கள் பலியானார்கள். 6 பேர் காயம் அடைந்தனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாண பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், வளாகத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது, திடீரென ஒரு மாணவன், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட தொடங்கினான். இதனால் அங்கிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இருப்பினும் இந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று துப்பாக்கிச்சூடு நடத்தியவரை சுட்டு பிடித்தனர். விசாரணையில் அவர், பீனிக்ஸ் இக்னர் (20) என்பதும் அதே பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மாணவர் என்பதும் தெரியவந்தது. மேலும், உள்ளூர் துணை ஷெரீப்பான அவரது தந்தையின் துப்பாக்கியை கொண்டு இந்த வெறிச்செயலில் அவர் ஈடுபட்டுள்ளார். கொல்லப்பட்ட இரண்டு பேரும் புளோரிடா பல்கலை மாணவர்கள் அல்ல என்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
The post புளோரிடா பல்கலை.யில் மாணவன் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி; 6 பேர் காயம் appeared first on Dinakaran.