ஜெட்டா: 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்காக நடைபெறும் ஏலத்தின் 2-வது நாளான திங்கள்கிழமை இந்திய வீரர் புவனேஷ்வர் குமாரை ரூ.10.75 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வாங்கியுள்ளது.
அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்ட வீரர் புவனேஷ்குமாரை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டியது மும்பை இந்தியன்ஸ் அணி. தொடர்ந்து லக்னோ அணி 2.20 கோடியிலிருந்து ஏலத்தை தொடங்கியது. இரு அணிகளும் போட்டி போட ரூ.10 கோடிக்கு வந்து நின்றது ஏலம். லக்னோ பின்வாங்க, மும்பை ரூ.10.25 கோடி கோரியது. அப்போது இடையில் வந்த ஆர்சிபி ரூ.10.75 கோடிக்கு புவனேஷ்வர் குமாரை தட்டி தூக்கியது.