பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் கர்நாடக ராஜ்யோத்சவா தின விழா குடிமையியல் நீதிமன்ற வளாகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.அருண் பேசுகையில், “பெங்களூரு கன்டோன்மென்ட் பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சி செய்த போது தமிழர்கள் அவர்களுக்கு அடிமைகளாக இருந்தனர். ஆனால் கன்னடர்கள் ஒருபோதும் அவர்களுக்கு அடிமையாக இருக்கவில்லை. மொழி என்பது ஒரு மாநிலத்தின் எல்லையை தீர்மானிக்கும் விஷயமாக இருக்கிறது. பெங்களூருவில் சில இடங்களில் பிற மொழியினரின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. இங்கு வாழும் அனைவரும் கன்னடம் கற்றுக்கொண்டு, கன்னடத்திலே பேச வேண்டும்” என்று பேசினார். இவரது பேச்சு கர்நாடக தமிழர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.