சென்னை: சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 50 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரத்தை சுட்டிக்காட்டி திமுக அரசுக்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒருவர் புகுந்து உள்நோயாளியாக இருந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மீண்டும் தலைநகரில், மிக முக்கியமான அரசு மருத்துவமனைகளுள் ஒன்றில், இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது, திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்புஎன்பது துளியும் இல்லை என்ற வெட்கக்கேடான நிலையை தெளிவாக காட்டிவிட்டது.