சென்னை : பெண்களை மையப்படுத்தாத குடும்பம்.. நிறுவனம்..அரசியல்..கலை..இலக்கியம்.. எதுவும் அதன் லட்சியத்தை அடைவதில்லை என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. அறிவியல், மருத்துவம், விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் பெண்களை குறிக்கும் வகையிலான காட்சிகள் இந்த டூடுலில் இடம்பெற்றுள்ளன. இதனிடையே கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
“உலகத் தாயினத்துக்கு
மகளிர்தின வாழ்த்துக்கள்
மண்ணில் பாதி மகளிர்;
மக்களில் பாதி மகளிர்
சமூகம் இயங்குவது
பெண்களால்
பெண்களை மையப்படுத்தாத
குடும்பம் நிறுவனம் அரசியல்
கலை இலக்கியம் எதுவும்
அதன் லட்சியத்தை
அடைவதில்லை
ஆண் ஒரு சிறகு
பெண் ஒரு சிறகு
சமூகப் பறவை
இரண்டு சிறகுகளால்
பறந்தால்தான்
இரைதேட முடியும்
சமையல் அறையிலிருந்து
பெண்ணுக்குக் கிட்டும்
விடுதலையைத் தான்
பூரண விடுதலையென்று
போற்றுவேன்
மகளிரின் பெருமையறிந்து
மதிப்போடு வாழ்த்துகிறேன்
வாழ்க பெண்ணினம்!”இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post பெண்களை மையப்படுத்தாத குடும்பம், நிறுவனம், அரசியல், கலை, இலக்கியம்.. எதுவும் அதன் லட்சியத்தை அடைவதில்லை : கவிஞர் வைரமுத்து ட்வீட் appeared first on Dinakaran.