ராஜஸ்தானில் காஜிபுரா கிராமத்தில் நடந்த பஞ்சாயத்தில் 15 கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகள் ஸ்மார்ட்ஃபோன்களை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கும் முடிவு கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி எடுக்கப்பட்டது. இந்த விவகாரம் ராஜஸ்தானில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பெண்களின் டிஜிட்டல் சுதந்திரம் குறித்த விவாதத்தைத் தூண்டியுள்ளது.

