*கலெக்டர், எஸ்பி துவக்கி வைத்தனர்
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறை-தனலட்சுமி சீனி வாசன் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறை, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம், சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து 36வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு நடத்திய விழிப்புணர்வு பேரணி, பெரம்பலூர் பாலக்கரையில் இருந்து சங்குபேட்டை, பழைய பேருந்து நிலையம் வழியாக தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் குலேஷன் பள்ளிவரைசாலைப் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணிநடத்தினர்.
இந்த விழிப்புணர்வுப் பேரணியை பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ், பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பச்சேரா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியின் போது பெரம்பலூர் உட்கோட்ட டிஎஸ்பி ஆரோக்கியராஜ், நேஷனல் ஹைவே டிராபிக் இன்ஸ்பெக்டர் கிள்ளி வளவன், பெரம்பலூர் டவுன் ட்ராபிக் இன்ஸ் பெக்டர் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள் பொது மக்களிடம், போக்குவரத்து விதிகள் எவ்வாறு முக்கியம், அவை ஏன் பின்பற்றப்பட வேண்டும், பல்வேறு வாகனங்களுக்கான பல்வேறு போக்குவரத்து விதிகள் மற்றும் போக்குவரத்து விதிகள் எவ்வாறு மனித உயிர்களைப் பாது காக்கின்றன என்பது குறித்து பொது மக்களிடையே விழிப்பு ணர்வை ஏற்படுத்திச் சென்றனர்.
மேலும் “தலைக்கவசம் என்பது உயிர் பாதுகாப்பு”, “சீட் பெல்ட் அணிய வேண்டும்”, “குடித்துவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம்”, “வேகம் விவேகம் அல்ல”, “செல்போனில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்ட வேண்டாம்” போன்ற போக்குவரத்து விதிகள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்திச் சென்றனர். இந்தப் பேரணியில் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் வெற்றிவேலன் மற்றும் 1000க்கும்மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
The post பெரம்பலூரில் தேசிய பாதுகாப்பு மாதத்தையொட்டி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.