சென்னை: பெரம்பலூரில் நாராயணசாமி நாயுடு சிலையை இடமாற்றம் செய்யக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “உழவர்களின் ஒப்பற்ற தலைவராக திகழ்ந்த சி.நாராயணசாமி நாயுடுவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படும் நிலையில், அவருக்கு எனது வணக்கங்களையும், மரியாதையும் செலுத்துகிறேன். உழவர்களின் நலன்களுக்காகவும், உரிமைகளுக்காகவும் அவர் நடத்திய போராட்டங்களையும், தியாகங்களையும் இந்த நாளின் உழவர்கள் நன்றியுடன் நினைவு கூற வேண்டும்.