ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ரூ.900 கோடியில் மில்கி மிஸ்ட் நிறுவனம் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய உள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செயல்படும் மில்கி மிஸ்ட் ஆலை பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி துறையில் முக்கிய நிறுவனமாக விளங்கி வருகிறது. கிரீம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பால் பொருட்கள் உற்பத்தியை மில்கி மிஸ்ட் இந்த ஆலையில் செய்து வருகிறது. இந்நிலையில் மில்கி மிஸ்ட் நிறுவனத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, ரூ.1,777 கோடி முதலீட்டிற்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில் முதல் கட்டமாக ரூ.900 கோடி முதலீடு செய்துள்ளது.
பெருந்துறையில் உள்ள தொழிற்சாலையை 2.26 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் விரிவாக்கம் செய்ய மில்கி மிஸ்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மில்கி மிஸ்ட் ஆலை விரிவாக்கத்தினால் கூடுதலாக 450 பேருக்கு கூடுதலாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரிவாக்கம் செய்யப்படும் தொழிற்சாலையில் பால் மற்றும் பால் பொருட்கள் தயாரிப்பதற்கான ஐஸ்கிரீம், பன்னீர்,பாயசம், சர்க்கரை இல்லாத கோவா மற்றும் சர்க்கரை உள்ள கோவா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பால் பொருட்களை இந்த ஆலையில் தயாரிக்க மில்கி மிஸ்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான பல்வேறு அனுமதிகளை பெறுவதற்கு மில்கி மிஸ்ட் நிறுவனம் விண்ணப்பித்துள்ள நிலையில் அனுமதிகள் கிடைத்தவுடன் விரிவாக பணிகள் தொடங்கப்பட்டு விரைவில் கூடுதல் விரிவாக்க ஆலையானது செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post பெருந்துறையில் ரூ.900 கோடியில் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்கிறது மில்கி மிஸ்ட் நிறுவனம்..!! appeared first on Dinakaran.