இந்திய அணியின் பேட்டிங் நடப்பு பார்டர் – கவாஸ்கர் டிராபியில் பெர்த் டெஸ்ட் வெற்றிக்குப் பிறகே கடுமையான பலவீனங்களின் காட்சிப்படுத்தலாக மாறிவிட்டது, மாற்றி விட்டனர் ஆஸ்திரேலிய பவுலர்கள், குறிப்பாக 5 வீரர்களின் பார்ம் மெல்பர்ன் டெஸ்ட்டில் வெற்றி பெற மிக மிக முக்கியமானது. ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த் இவர்கள் தலா 50 ரன்களை எடுத்தே ஆக வேண்டும்.
இந்நிலையில், வலைப்பயிற்சியில் விராட் கோலி தன் பேட்டிங் உத்திகளில் சிறு மாற்றங்களை செய்துள்ளார். அவரது ஈகோ பெரியது, மண்டை வீங்கி முன் காலை குறுக்காகப் போட்டு வெளியே செல்லும் பந்துகளை வாரிக்கொண்டு கவர் ட்ரைவ் ஆடுகிறேன் என்று எட்ஜ் ஆகி அவுட் ஆவதைப் பார்த்துப் பார்த்து நமக்கே சலிப்புத் தட்டிவிட்டது, சமயங்களில் அவரது ரசிகர்களுக்கும் ரசிகர் அல்லாதோரும் அவர் அவுட் ஆகும் விதத்தைப் பார்த்து கோபாவேசம் அடைந்திருப்பார்கள்.