புதுடெல்லி: கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல் வழக்கில் தொடர்புடைய தீவிரவாதி தஹாவூர் ராணா, தற்போது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகளின் விசாரணையில் உள்ளார். அவரிடம் நாளொன்றுக்கு 8 முதல் 10 மணி நேரம் வரை விசாரணை மேற்கொள்வதாக தகவல். விசாரணையில் உள்ள அவர், தனக்கு பேனா, பேப்பர் மற்றும் குர்ஆன் வேண்டுமென கேட்டுள்ளதாக தகவல்.
மேலும், அவருக்கு அவ்வப்போது மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப் படுவதாகவும், தனது தரப்பு வழக்கறிஞர்களை சந்திக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.