சென்னை: எதிர்க்கட்சிகளின் கேள்வியை தவிர்ப்பதற்காக அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவை கூட்டத்தில் நேற்று பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னையில் கடந்த ஏப்.5-ம் தேதி நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய திமுக மூத்த அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதற்கு வருத்தம் தெரிவித்தும் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமென அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.