
சென்னை: “பல காட்சிகளில் உணர்வுப்பூர்வமாக என்னைப் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடிந்தது. சமூக ஒற்றுமை வேண்டும் என்ற ஆழ்ந்த விருப்பத்தை அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு வெளிப்படுத்தி இருக்கிறார்” என ‘பைசன்’ திரைப்படம் குறித்து தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள, பைசன் – காளமாடன் திரைப்படத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. ஓர் அற்புதமான, உணர்வுப்பூர்வமான திரைப்படத்தைத் தந்திருக்கிறார். அவருக்கும், படக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

