சென்னை: பொங்கல் விழா நாட்களில் தேர்வு நடத்துவதா? என ஒன்றிய அரசுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். “பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் எழுதக் கூடிய தேர்வை பொங்கல் நாளன்று வைத்திருப்பது கண்டனத்துக்குரியது. தமிழர்களின் குரல்களை கேட்க மனமின்றி தொடர்ந்து பண்பாட்டு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது” என தெரிவித்துள்ளார்.
The post பொங்கல் விழா நாட்களில் தேர்வு நடத்துவதா?- ஒன்றிய அரசுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனம் appeared first on Dinakaran.