புதுடெல்லி: பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு எந்த வழிகாட்டுதலும் வழங்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்து மூலம் அளித்த பதிலில், “பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு எந்த வழிகாட்டுதலும் வழங்கப்படவில்லை” என கூறியுள்ளார்.