சென்னை: மாணவர்கள் அரசு பொதுத் தேர்வு எழுதுவதை முன்னிட்டு, அடுத்த 2 மாதங்களுக்கு மின்தடை செய்யக் கூடாது என பொறியாளர்களுக்கு, மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
மின்னுற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, தமிழக மின்வாரியம் வீடுகள், கடைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின்கம்பம், கேபிள், மின்விநியோக பெட்டி, மின்மாற்றி உள்ளிட்ட சாதனங்கள் உதவியுடன் விநியோகம் செய்கிறது. இவற்றில் 24 மணி நேரமும் மின்சாரம் செல்வதால் எப்போதும் வெப்பத்துடன் இருக்கும். எனவே, மின்சாதனங்களின் பழுது ஏற்படுவதை தடுக்க, குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.